என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரே‌ஷன் அரிசி
  X
  ரே‌ஷன் அரிசி

  நெல்லையில் இன்று 2 லாரிகளில் கடத்திய 30 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் இன்று 2 லாரிகளில் கடத்திய 30 டன் ரே‌ஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை:

  சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை நோக்கி லாரிகளில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் முன்னீர் பள்ளம் சோதனை சாவடி அருகே இன்று காலை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

  லாரியில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதைத்தொடர்ந்து லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை நடத்தினர்.

  அப்போது லாரியில் ஏராளமான சாக்கு மூட்டைகளில் சுமார் 30 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து லாரிகள் மற்றும் அவற்றுடன் இருந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×