search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சாலையில் கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர ஆமை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    திருப்பூர் வனத்துறை ஊழியர் சிவமணி நேரடியாக சிவானந்தம் வீட்டிற்கு வந்து ஆமையை சோதனை செய்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பூலுவப்பட்டி பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பூலுவபட்டி அருகே  சாலையில் நட்சத்திர ஆமை குட்டி ஒன்று நகர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டார். வாகனங்கள் அதிகம் பயணிக்கும் பகுதி என்பதால் உடனடியாக ஆமையை பாதுகாப்பாக எடுத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். 

    அங்கு ஆமைக்கு தேவையான உணவை அவரது குடும்பத்தினர் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். நட்சத்திர ஆமை அரிய வகை என்பதால் சிவானந்தம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

    அதனைத்தொடர்ந்து திருப்பூர் வனத்துறை ஊழியர் சிவமணி நேரடியாக சிவானந்தம் வீட்டிற்கு வந்து ஆமையை சோதனை செய்தார். 

    பின்னர் அவரிடம் நட்சத்திர ஆமையை சிவானந்தம் குடும்பத்தினர் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். திருப்பூரில் அரிய வகையான நட்சத்திர ஆமை எப்படி வந்தது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×