என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மார்த்தாண்டம் அருகே ஆம்பர் கிரீஸ் விற்க வந்த 2 வாலிபர்கள் கைது

    மார்த்தாண்டம் அருகே ஆம்பர் கிரீஸ் விற்க வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாகநின்ற இரண்டு நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்த போது போலி ஆம்பர் கிரீஸ் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மாவடியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 27), நாங்குநேரி மிக்கேல் ராஜா (30) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் தக்கலை, கீழக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ராஜா என்பவருக்கு ஆம்பர் கிரீசை கொடுக்க வந்தது தெரியவந்தது. ஆம்பர் கிரீசை விற்பனை செய்வதற்கு ராஜேஷ் ராஜாவிடம் ரூ.2 லட்சம் பணம் பேசி ரூ.10 ஆயிரம் முன்பணம் பெற்றதாகவும் கூறினார்கள்.

    போலி அம்பர் கிரீசை வைத்திருந்த சுபாஷ், மிக்கேல்ராஜா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டனர். இருவர் மீதும் மார்த்தாண்டம் போலீசார் மோசடி வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். திமிங்கலத்தால் உமிழப்படும் மெழுகு போன்ற பொருளே ஆம்பர் கிரீஸ் ஆகும். இது உயர் தர நறுமண பொருள் தயாரிக்க பயன்படுத் தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் பகுதியில் ஆம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மார்த்தாண்டம் பகுதியில் சிக்கி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    Next Story
    ×