search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    இந்துத்துவா பற்றி பேச்சு-ராகுல்காந்திக்கு இந்து முன்னேற்ற கழகம் கண்டனம்

    பிரிவினை ஏற்படுத்தும் விதமாக பேசாமல் தன் கட்சியின் சாதனைகளை பற்றி பேசி ராகுல் காந்தி அவர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.
    திருப்பூர்:

    இந்துத்துவா பற்றிராகுல் காந்தி பேசியதற்கு இந்து முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் வக்கீல் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் இந்துத்துவா பற்றி பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.

    கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது செய்ய முடியாததை 7 ஆண்டிற்குள் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது. ராகுல்காந்தி இந்துக்கள் பற்றியும், இந்துத்துவா பற்றியும் பேசாமல் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகளை பற்றி பேசி பிரச்சாரம் செய்வது நல்லது. இந்திய நாடு இந்துக்கள் நாடு என்று ராகுல் காந்தி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. 

    ஆனால் அந்த இந்துக்கள் நல்லமுறையில் வாழ்வதற்கு இந்துத்துவாவாதிகள் போராடுகிறார்கள் என்பதை ராகுல்காந்தி புரிந்துக்கொள்ள வேண்டும். இந்துத்துவாவாதிகள் அதிகாரத்தில்தான் குறியாக இருக்கிறார்கள் என்று ராகுல்காந்தி பேசியது கண்டனத்திற்குரியது. 

    இந்துத்துவாதிகள் என்றுமே அதிகாரத்தை தேடி சென்றதில்லை, அதிகாரமே அவர்களைத் தேடி சென்றது. அரபுநாடுகளில் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்யும் போது, கிறிஸ்துவ நாடுகளில் கிறிஸ்துவர்கள் ஆட்சி செய்யும் போது, இந்துக்கள் நாட்டில் இந்துத்துவாவாதிகள் ஏன் ஆட்சி செய்யக்கூடாது? . 

    எனவே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக பேசாமல் தன் கட்சியின் சாதனைகளை பற்றி பேசி ராகுல் காந்தி அவர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து மாநிலத்திலும் பாரதிய ஜனதா அமைக்கும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
    Next Story
    ×