என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
திருப்பூரில் மீன் மார்க்கெட்- கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்
அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள். இந்தநிலையில் இன்று மீன்கள் விலை குறைவால் பொதுமக்கள் ஏராளமானோர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

இதேப்போல் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமைதோறும் அதிகம்பேர் வருகின்றனர் என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பூங்காவிலும் பொழுது போக்குவதற்காக பொதுமக்கள் குழந்தை களுடன் குவிந்தனர். இந்தநிலையில் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் பலர் கடைப்பிடிக்காமல் உள்ளனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






