என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய வாலிபர் கைது
இளம்பெண்கள் 5 பேர் ஒரு அறையில் மறைந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி ரோடு கீரணி ஜங்ஷன் பகுதியில் மசாஜ் சென்டர் உள்ளது, இங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரேமா தலைமை யிலான போலீசார் அந்த மசாஜ் சென்டரில் சோதனை செய்தனர்.
அப்போது இளம் பெண்கள் 5 பேர் ஒரு அறையில் மறைந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை போலீசார் மீட்டு விசாரித்த போது சென்னையில் இருந்து தங்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினர்.
இதையடுத்து 5 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் நடத்திய கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராகுல் பிரசாத் ( வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






