என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தோட்டக்கலை பயிர் சாகுபடியில் அடர்நடவு முறையை பின்பற்றினால் கூடுதல் வருவாய் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்
ஒரு வாழை நடும் இடத்தில்3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மேற்குபதி கிராமத்தில் தோட்டக்கலை பயிர்கள் அடர் நடவு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் வேளாண் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழில்நுட்ப வல்லுனர் பச்சியப்பன் பேசுகையில்:
‘மா, வாழை பயிர்களை அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதன் மூலமாக 3 மடங்கு கூடுதல் வருவாய் பெறலாம். வழக்கமாக ஒரு வாழை நடும் இடத்தில் 3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.
Next Story






