search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    குண்டடம் கோவில் விழாவில் அம்மன் வீதி உலா-இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

    முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பக்தர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    குண்டடம்:

    தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள தும்பலப்பட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

    இதைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலையில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பூவோடு, ஆயிரம் கண் பானை எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். 

    இதையடுத்து பிற்பகலில் முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பக்தர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற பக்தர் ஒருவர் 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணி அளவில் மாவிளக்கு எடுத்து அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். இன்று முதல் சனிக்கிழமை வரையில் 3 நாட்கள் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 
    Next Story
    ×