search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் தொழில் கடன் வழங்கும் முகாம் - வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது

    தகுதியான தொழில்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.
    திருப்பூர்:

    தொழில் முதலீட்டு கழக திருப்பூர் மாவட்ட கிளை அலுவலகம் அவிநாசி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே செயல்படுகிறது. இங்கு தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் வழங்கும் முகாம்  வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது.

    இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:

    தொழில் முதலீட்டு கழக திருப்பூர் மாவட்ட கிளை அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்ற விரிவான சேவை அளிக்கப்படும். 

    தகுதியான தொழில்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி  வரை வழங்கப்படும். சிறப்பு முகாமில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது. ‘நீட்ஸ்’ திட்டத்தில் ஆய்வு கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

    அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர் தொழில் திட்டங்களுடன் வந்து தொழிற்கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய கடன் திட்ட சேவையை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    Next Story
    ×