search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவிநாசிபாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட குட்டையை மீட்க விவசாயிகள் கோரிக்கை

    திருப்பூர் தெற்கு தாசில்தார் உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும், ஊராட்சி நிர்வாகம் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவிநாசிபாளையம் உள்வட்டம், வடக்கு அவிநாசிபாளையம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கசாவடி அமைக்கப்பட்டது. வேலம்பட்டி கிராமத்தில் குளத்தை ஆக்கிரமித்து சுங்கசாவடி அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் அளித்தனர். 

    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடந்தது. அதன்படி குட்டையின் கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    திருப்பூர் தெற்கு தாசில்தார் உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும், ஊராட்சி நிர்வாகம் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுங்கசாவடி அமைத்த போது  ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலையும் ஆக்கிரமிக்கப்பட்டது. 

    இதுகுறித்து வருவாய்த்துறைக்கு புகார் அளித்து அளவீடு செய்யப்பட்டது. அதன்மூலம் குட்டைக்கு உட்பட்ட பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாசில்தார் உத்தரவிட்டிருந்தார்.

    இருப்பினும் 3 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருக்கிறது. நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற  கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×