search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி
    X
    ஏரி

    தொடர் மழை: சென்னை குடிநீர் ஏரிகள் 86 சதவீதம் நிரம்பியது

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மி.கனஅடி, ஏரியில் 3,189 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 810 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
    போரூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 10 ஆயிரத்து 115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 9 ஆயிரத்து 848 மி.கனஅடி தண்ணீர் இருந்தது.

    கடந்த ஆண்டை விட தண்ணீர் அதிகம் இருப்பதால் வரும் மாதங்களில் சென்னைக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும். பருவமழை இன்னும் முடியாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் தற்போது 86 சதவீதம் நிரம்பி உள்ளது. கடந்த ஒரு வாரமாக ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் தற்போது மழை இல்லாததால் குறைக்கப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2,921 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 3,712 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 3,261 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மி.கனஅடி, ஏரியில் 3,189 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 810 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 276 கனஅடி வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 789 மி.கனஅடி தண்ணீர் (மொத்த கொள்ளளவு 1,084 மி.கனஅடி) உள்ளது. ஏரிக்கு 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 415 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியில் 2,936 மி.கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி). ஏரிக்கு 688 கனஅடி தண்ணீர் வருகிறது. 294 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுக்கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 143 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×