என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை
அலங்காநல்லூரில் பெருமழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
அலங்காநல்லூர் - கேட்டுக்கடை செல்லும் சாலையில் சுமார் 3 அடிக்கு மேல் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தேங்கிய மழைநீர் மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி காட்சியளித்தது.
சுமார் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த பெருமழையால் தெருக்களில், வீதிகளில் தண்ணீர் புகுந்தது. அலங்காநல்லூர் - கேட்டுக்கடை செல்லும் சாலையில் சுமார் 3 அடிக்கு மேல் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காற்றுடன் பெய்த கனமழையால் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினர். அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீரால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story