என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
வேப்பனப்பள்ளி அருகே புகையிலை விற்ற 3 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது குட்கா பொருட்கள் விற்றதாக நாகராஜபுரம் கோவிந்தசாமி (வயது 37), சவுளூர் கூட்ரோடு குமார் (44), வேப்பனப்பள்ளி நசீமா (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






