search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஜாவத் புயல் - திருப்பூர் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து

    அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய அரோனி எக்ஸ்பிரஸ் இயக்கம் நேற்று நிறுத்தப்பட்டது.
    திருப்பூர்:

    வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‘ஜாவத்’ புயலாக மாறி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை (4-ந் தேதி) நெருங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    இதனால் தென் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல்பகுதியில் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தெற்கு ரெயில்வே ரெயில் இயக்கத்தை ரத்து செய்தும், வழித்தடம் மாற்றியும் இன்றும், நாளையும் இயக்குகிறது. 

    அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு இயக்கப்படும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய அரோனி எக்ஸ்பிரஸ் இயக்கம் நேற்று நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×