என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி பலி - வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம்

    திருமுருகன்பூண்டியை சேர்ந்த 27 வயதான ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 

    அவர்கள் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமுருகன்பூண்டியை சேர்ந்த 27 வயதான ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டார்.  

    கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    எனவே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இந்தநிலையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், தூய்மை பணியாளர்கள் மூலம் வார்டுகள் தோறும் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கி உள்ளது. 
    Next Story
    ×