search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தீன்.
    X
    மத்தீன்.

    அமைச்சர்கள் பங்கேற்பு - உடுமலையில் நாளை மக்கள் சபை மனுக்கள் பெறும் முகாம்

    முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை அமைச்சர்களிடம் நேரடியாக மனுக்களாக அளிக்கலாம்.
    மடத்துக்குளம்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்து வருகிறது. அந்தந்தப் பகுதியில் சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், பேருந்து, சுகாதார வசதிகள் குறித்தும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம். அதன்படி உடுமலை நகரில் நாளை 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுக்களைப் பெறும் முகாம் நடக்கிறது. 

    இதுகுறித்து உடுமலை நகர தி.மு.க. செயலாளர் மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுஷம் தியேட்டர் பின்புறம் உள்ள வாணி ராணி மஹாலிலும், மற்றும் தளி ரோட்டில் உள்ள தேஜஸ் நகராட்சி திருமண மண்டபத்திலும் மக்கள் சபை அரசு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெறுகிறார்கள்.

    முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை அமைச்சர்களிடம் நேரடியாக மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×