என் மலர்

    செய்திகள்

    அப்பல்லோ மருத்துவமனை
    X
    அப்பல்லோ மருத்துவமனை

    ஜெயலலிதா மரணம் விவகாரம்- அப்பல்லோ வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்று அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது.

    அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில் மீண்டும் மீண்டும் எங்கள் மருத்துவர்களையே விசாரிக்கிறார்கள். விசாரணை ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    ஜெயலலிதா


    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று அப்பல்லோ தரப்பில் வாதிட்டனர்.

    விசாரிக்க வேண்டிய சாட்சிகள் பட்டியலை வழங்க அப்பல்லோவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணை ஆணையம் கோர்ட்டு அறைபோல் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


    இதையும் படியுங்கள்...  ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?
    Next Story
    ×