என் மலர்

  செய்திகள்

  வாக்காளர் பட்டியல்
  X
  வாக்காளர் பட்டியல்

  சென்னையில் அடாத மழையிலும் விடாமல் தொடர்ந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரும் 4-ந் தேதி, 5-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும்.
  சென்னை:

  வருகிற ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி 5-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

  அதன்படி இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அறிவித்து இருந்தார்.

  சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்தது. இருப்பினும் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற்றது.

  இந்த முகாம்களில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற மாற்றங்களை செய்து கொண்டனர். மழை காரணமாக முகாம்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.

  மேலும் வீட்டில் இருந்தபடியே www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், மொபைல் ஆப் மூலமும் இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

  அடுத்த முகாம் வரும் 4-ந் தேதி (சனி) 5-ந் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.
  Next Story
  ×