என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லையில் இன்று 13 பேருக்கு கொரோனா

    பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது.

    எனினும் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட, மாநகராட்சி சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 20-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

    நேற்று பாதிப்பு சற்று உயர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று அது மேலும் அதிகரித்துள்ளது.

    மாநகர பகுதியில் பெண் டாக்டர் உள்பட 8 பேர், பாளை, ராதாபுரத்தில் தலா 2 பேர், அம்பையில் ஒருவர் என இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 49,594 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,055 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பொதுஇடங்களில் மீண்டும் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் செல்வதையும் காண முடிகிறது.

    எனவே பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
    Next Story
    ×