search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு பருவமழை,
    X
    வடகிழக்கு பருவமழை,

    தமிழகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று சென்னை வருகை

    தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்தார்.
    https://www.maalaimalar.com/news/district/2021/11/21040321/3218387/Tamil-News-ADMK-District-Secretaries-Meeting-held.vpf
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என  கோரப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.

    அதன்படி, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று மதியம் சென்னை வருகின்றனர்.

    இன்று சென்னை வரும் இக்குழுவினர் முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்கின்றனர். அதன்பின், சில குழுக்களாகப் பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசுகிறார்கள்.

    Next Story
    ×