என் மலர்

  செய்திகள்

  டெங்கு காய்ச்சல்
  X
  டெங்கு காய்ச்சல்

  வி.கைகாட்டியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வி.கைகாட்டியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
  வி.கைகாட்டி:

  அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதியை சேர்ந்த 10 வயது மாணவன் ஒருவன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கொசுக்கடியால் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. அந்த மாணவனை பெற்றோர் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியானது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், சாக்கடை கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
  Next Story
  ×