search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    நெல்லையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்வு

    தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.

    இதனால் நெல்லை, தென்காசி பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட செடிகள் நீரிலேயே மூழ்கி அழுகி விட்டன.

    இந்த தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து அதிகரிக்க தொடங்கிய காய்கறிகளின் விலை இந்த வாரம் மேலும் உயர்ந்துள்ளது.

    நெல்லையில் இன்று தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்தரிக்காய் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பாளை மார்க்கெட்டில் வெள்ளை நிற கத்தரிக்காய் ரு.90 வரையிலும், மற்ற நிறத்திலான கத்தரிக்காய் ரூ.70 வரையிலும் விற்பனையாகிறது.

    இதேபோல் கேரட் ரு.60 முதல் 100 வரையிலும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×