என் மலர்

  செய்திகள்

  எக்ஸ்பிரஸ் ரெயில்
  X
  எக்ஸ்பிரஸ் ரெயில்

  எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் (12634) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  நிலச்சரிவு காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் இன்று (17-ந்தேதி) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

  * நாகர்கோவில்-திருவனந்தபுரம் (வண்டி எண்: 06426), திருவனந்தபுரம்-நாகர்கோவில் (06427), கொல்லம்-திருவனந்தபுரம் (06425), திருவனந்தபுரம்-கொல்லம் (06435) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் (12634) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இயக்கப்படும் ரெயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  * கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (16525) ரெயில் கன்னியாகுமரி-கொல்லம் இடையிலும், நாகர்கோவில்-கோட்டயம் (06366) ரெயில் நாகர்கோவில்-கொல்லம் இடையிலும், கொல்லம்-எழும்பூர் (16724) ரெயில் கொல்லம்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-மங்களூரு (06650), நாகர்கோவில்-மங்களூரு (06606) ரெயில்கள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  * மங்களூரு-நாகர்கோவில் (06649), மங்களூரு-நாகர்கோவில் (06605) ரெயில்கள் திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையிலும், திருச்சி-திருவனந்தபுரம் (02627) ரெயில் நெல்லை-திருவனந்தபுரம் இடையிலும், திருவனந்தபுரம்-திருச்சி (02628) ரெயில் திருவனந்தபுரம்-நெல்லை இடையிலும், கன்னியாகுமரி-ஹசரத் நிசாமுதீன் (06011) ரெயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
  Next Story
  ×