என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவேற்காடு நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 100 தொழிலாளர்கள்
Byமாலை மலர்16 Nov 2021 3:18 PM IST (Updated: 16 Nov 2021 3:18 PM IST)
தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டில் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியிலிருந்து 100 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வீடுகள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்தும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நகராட்சி கமிஷனர் வசந்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மேற்பார்வையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள நீரில் ஆயில் பால் போடப்பட்டது.
இதன் மூலம் கொசு முட்டை, கொசு உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story
×