search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    44 பள்ளிகளை தவிர சென்னையில் நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

    கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    மறுநாளே சென்னையில் பலத்த மழை பெய்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததாலும், தீபாவளி விடுமுறையாலும் பள்ளிகள் கடந்த 10 நாட்களாக திறக்கப்படவில்லை.

    அதேபோல மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன.

    சென்னையில் தற்போது மழை நின்றுவிட்டது. பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதையடுத்து வெள்ளம் வடிந்து இருக்கிறது.

    சில இடங்களில் மட்டும் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. அதனை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் நாளை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 281 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இங்கு தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு இருக்கிறது. காற்றினால் விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஆய்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் இன்று நடத்துகிறார்கள். சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வெள்ளநீர் அகற்றப்பட்டு இருக்கிறதா? மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சூழ்நிலை உள்ளதா என்று பார்வையிடுகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பு

    44 மாநகராட்சி பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படியுங்கள்...கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடானது- தீவுகளாக மாறிய கிராமங்கள், 50 ஆயிரம் வீடுகள் மிதக்கின்றன

    Next Story
    ×