search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

    மழை பாதிப்பு காரணமாக கடந்த 3 நாட்களாகவே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 300 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது.

    தொடர் மழை காரணமாக கடந்த 2 நாட்களாகவே சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்து மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    நேற்று முதல் மழை குறைந்து உள்ள போதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. முழுவதுமாக தண்ணீர் வடியாததாலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்றும் குறைந்த அளவிலான சில்லரை வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளனர். மழை காரணமாக வரத்து குறைந்து வருவதால் காய்கறி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இதுகுறித்து மொத்த வியாபாரி பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி தோட்டங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்து உள்ளது. மழை பாதிப்பு காரணமாக கடந்த 3 நாட்களாகவே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை குறைய தொடங்கி உள்ளதால் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல வியாபாரிகள் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளில் இன்றைய காய்கறி விற்பனை விலை விபரம் (கிலோவுக்கு)வருமாறு:-

    தக்காளி ரூ.80, நாசிக் வெங்காயம் ரூ.55, ஆந்திரா வெங்காயம் ரூ.35, ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ35, ஊட்டி கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.70, வெண்டைக்காய் ரூ.80, கோழி அவரைக்காய் ரூ.80, பாகற்காய் ரூ.50, வரி கத்தரிக்காய் ரூ.60, உஜாலா கத்தரிக்காய் ரூ.70, சவ்சவ் ரூ.20, முட்டை கோஸ் ரூ.30 முருங்கைக்காய் ரூ.100.

    Next Story
    ×