
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல துணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. அது வட தமிழகம் அதனையொட்டி பகுதிகளில் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அது மேலும் வலுவிழந்து விடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.