search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்தது

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 646-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 168-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்துள்ளது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 554-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 432-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.92-ம் பவுனுக்கு ரூ.736-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 646-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 168-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


    Next Story
    ×