என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 756 ஆக குறைந்தது
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதேபோல் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் வேகமாக தாக்கம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் சுகாதார துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 691 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 756 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நமது மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் முதியவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். எனவே முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத முதியவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story






