என் மலர்
செய்திகள்

விபத்து பலி
சூளகிரி அருகே வாகனம் மோதி பெண் பலி
சூளகிரி அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 45). சம்பவத்தன்று சூளகிரிக்கு வந்த கோவிந்தம்மாள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கோவிந்தம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






