search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    மழையால் வரத்து இல்லை- தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை

    மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தொடர் கனமழை காரணமாக குறைந்துள்ளது. இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ30-க்கு விற்று வந்த தக்காளி கடந்த 2 நாட்களாகவே திடீரென விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் மழையால் ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×