என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தீபாவளி மது விருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி - போதைக்காக மதுவுடன் ‘தின்னர்’ கலந்து குடித்தார்களா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் பரபரப்பு தீபாவளி மது விருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி போதைக்காக மதுவுடன் ‘தின்னர்’ கலந்து குடித்தார்களா? விசாரணை கோவை-02

  கோவை,நவ.5-

  கோவை பாப்ப நாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் பார்த்தீபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (57). சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றனர்.

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள் 3 பேரும் கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டித்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய, விடிய மது குடித்தனர். இரவு அங்கேயே படுத்து தூங்கினர். காலையில் எழுந்ததும் 3 பேரும் மீண்டும் மது குடித்தனர்.

  பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்தீபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் கள்ளச்சாரயம் குடித்து இறந்து இருக்கலாம் என அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த போது 3 பேரும் சாப்பிடாமல் இரவு முழுவதும் விடிய, விடிய மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் குடலில் இருந்து பெயிண்ட் அடிக்க கலக்கும் தின்னர் போன்ற ஒரு வாசனை வந்தது. எனவே அவர்கள் 3 பேரும் பெயிண்டர் என்பதால் போதைக்காக மதுவுடன் தின்னரை கலந்து குடித்தார்களா? என்பதற்காக அவர்களது உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவு வந்த உடன் அவர்கள் மதுவுடன் எதை கலந்து குடித்தார்கள் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

  தீபாவளி பண்டிகை நாளில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. * * * பார்த்திபன் * * * முருகானந்தம் * * * சக்திவேல்

  Next Story
  ×