என் மலர்

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22). இவர் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இறங்கி உள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×