search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    ஊட்டி பஸ் நிலையம் அருகே உர குடோனில் பயங்கர தீ விபத்து

    தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மருந்துகள், உதிரி பாகங்கள், உரங்கள் என அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுவரை 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தாஸ்பிரகாஷ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உர குடோன் ஒன்று உள்ளது.

    இங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

    நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் இந்த குடோனில் இருந்து ஒரே கரும்புகையாக வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த குடோன் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ஊட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்ததும் ஊட்டி போலீசார், தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மருந்துகள், உதிரி பாகங்கள், உரங்கள் என அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுவரை 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, எப்படி தீ விபத்து ஏற்பட்டது, மீன் கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×