search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.
    X
    தி.மு.க.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

    அரக்கோணம் ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 17 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், அதிமுக, அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதியன்று ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களுக்கும் 9-ம் தேதி அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய நான்கு ஒன்றியங்களும் என 7 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். இதில் 13 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர்.

    இதில் அரக்கோணம் ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 17 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், அதிமுக, அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆற்காடு ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் சுயச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளில் திமுக 5 இடத்திலும், அதிமுக, பாமக, காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 8 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், அதிமுக 4 இடத்திலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக10 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். திமிரி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளுக்கு திமுக 13 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சை 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வாலாஜா ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக, காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஆக மொத்தம் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 80 இடத்திலும் அதிமுக 16 இடங்களிலும் பாமக 17 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும், அமமுக, பிஜேபி தலா ஒரு இடங்களிலும் சுயட்சை 8 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
    Next Story
    ×