என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    நாகரசம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

    நாகரசம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலை பக்கமுள்ள கனிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 80). விவசாயி. சம்பவத்தன்று இவர் நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×