என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  குமரி மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 211 பேரிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளையில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் முன்கள பணியாளர்கள் காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளுக்குச் சென்று சளி மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள்.

  மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,863 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நாகர்கோவில் பகுதியில் 5 பேரும், திருவட்டாரில் 6 பேரும், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, தக்கலை, முன்சிறை யூனியனில் தலா 2 பேரும், மேல்புறம், தோவாளையில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59387 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 41 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 72 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 211 பேரிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா அபராதமாக ரூ.2 கோடியே 70 ஆயிரத்து 12 ஆயிரத்து 300 வசூலாகி உள்ளது.
  Next Story
  ×