என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கபிஸ்தலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கபிஸ்தலம்:

  கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் கீழ தெருவில் வசிப்பவர் பவுன்ராஜ். இவரது மகன் மோகன் (வயது 20), இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். அன்று முதல் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிய வருகிறது.

  இதனால் மனமுடைந்த மோகன் வி‌ஷ மருந்தை குடித்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அவரது தந்தை பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×