என் மலர்

  செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்டவை.
  X
  பறிமுதல் செய்யப்பட்டவை.

  டெல்லியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் ரெயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
  ராயபுரம்:

  ராயபுரம் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3மணியளவில் வட மாநிலத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் உரிய ஆவணம் இல்லாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மின்சார பொருட்கள், செல்போன்கள் கடத்தப்படுவதாக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரி சிவன்காளை தலைமையில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ள வந்திருந்தபோது ராயபுரம் மேம்பாலத்தில் லாரி மற்றும் மினி வேன்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. அவற்றை சோதனை செய்தனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் ரெயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

  உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புடைய மின்சார பொருட்கள் மற்றும் செல்போன்கள் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. எனவே வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் 13 வாகனங்களையும் பறிமுதல் செய்து கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
  Next Story
  ×