என் மலர்

  செய்திகள்

  ஆயுள் தண்டனை
  X
  ஆயுள் தண்டனை

  கயத்தாறு அருகே முதியவரை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கயத்தாறு அருகே முதியவரை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதனைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.

  கயத்தாறு:

  கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 26).

  இவர் கடந்த 23.1.2019, அன்று தனது பெண் குழந்தைகளை திட்டி உள்ளார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (27), என்பவர் இறந்து போன தனது தாயாரை காளீஸ்வரி திட்டியதாக கருதியுள்ளார்.

  கோபமடைந்த பால முருகன், காளீஸ்வரியை அரிவாளால் வெட்ட முயன்று அவளை துரத்தி சென்றார். அப்போது அதனை காளீஸ்வரியின் தாத்தா ஆறுமுகப்பெருமாள் (60) தடுத்துள்ளார்.

  ஆத்திரத்தில் பால முருகன் அரிவாளால் ஆறுமுகப்பெருமாளை வெட்டியதில் அவர் இறந்தார்.

  இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜரானார்.

  வழக்கை நீதிபதி பாண்டியராஜன் விசாரித்து பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதனைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.

  மேலும் காளீஸ்வரி தாக்கியதிற்க்காக ஓராண்டு சிறை தண்டனையும், விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார்.

  Next Story
  ×