என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 கட்டங்களாக வாக்குப்பதிவு- புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்22 Sep 2021 7:38 AM GMT (Updated: 22 Sep 2021 8:35 AM GMT)
புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Next Story
×