என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
அறந்தாங்கியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
அறந்தாங்கியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் உள்ள சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மாலதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






