என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள் விரட்டியடிப்பு
    X
    யானைகள் விரட்டியடிப்பு

    விவசாய நிலங்களில் புகுந்த 3 யானைகள் விரட்டியடிப்பு

    விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து காட்டு 3 யானைகள் வெளியே வந்தன. பின்னர் அந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு திம்மசந்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தது.

    பின்னர் நேற்று காலை லிங்கதீரணப்பள்ளி ஏரி பகுதிக்கு அந்த யானைகள் வந்து முகாமிட்டுள்ளன. இதையடுத்து விவசாய நிலங்களுக்கு சென்ற கிராம மக்கள் 3 யானைகள் ஏரியில் முகாமிட்டுள்ளதை பார்த்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து ஏரியில் நின்ற 3 யானைகளை விரட்டினர். அப்போது அங்குள்ள ராகி நிலங்களை காலால் மிதித்து நாசம் செய்து கொண்டு மீண்டும் திம்மசந்திரம் காட்டு பகுதிக்குள் யானைகள் சென்றன. பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×