என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    காஞ்சீபுரம் அருகே தொழிலாளி குத்திக்கொலை

    காஞ்சீபுரம் அருகே மூட்டை தூக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு பள்ளிக்கூடம் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 25). இவர் அங்குள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்றார். இரவு 11 மணி அளவில் பிரேம்குமாரை மர்ம கும்பல் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கொலை வழக்கு முன்விரோதம் சம்பந்தமாக நடந்துள்ளதாக தெரிய வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×