என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை

    ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள அறையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவருடைய மனைவி இலக்கியா (27). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கண்ணன் சிங்கப்பூருக்கு சென்று வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த கண்ணன் அதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறிவந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×