என் மலர்
செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர்
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 பேர் நன்னடத்தையில் விடுவிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஜெயராமன் (வயது24), வெங்கடேசன் (22), கார்த்தி என்ற கார்த்திகேயன் (29), கோபு (36), வெங்கடேசன் (38), வேல்முருகன் (27), ராஜேஷ் (38) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோளின்படி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. ஒரு ஆண்டுக்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்தார்.
Next Story






