என் மலர்
செய்திகள்

மரணம்
புதுக்கோட்டை அருகே மரம் விழுந்து தொழிலாளி பலி
புதுக்கோட்டை அருகே மரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 61). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று சக தொழிலாளர்களுடன் சேர்ந்து கீரமங்கலம் கொடிக்கரம்பை பகுதியில் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்த போது வெட்டப்பட்ட மரம் மனோகரன் மீது சாய்ந்துள்ளது. மரத்திற்குள் சிக்கியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் மனோகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






