என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பூதப்பாண்டி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

    பூதப்பாண்டி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட முடங்கன்விளை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

    இங்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலிகுடங்களுடன் முடங்கன்விளை பகுதியில் திரண்டனர். திடீரென சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து தெள்ளாந்தி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரியும், பொது மக்களிடம் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட் டது. சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் மோட்டார் பழுது என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றே எங்களது கிராமம் புறக்கணிக்கப்படுகிறது என்றனர்.
    Next Story
    ×