என் மலர்
செய்திகள்

புளியரை சோதனை சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்களை காணலாம்
தென்காசி எல்லையில் தீவிர பரிசோதனை- 4 கிலோ மீட்டர் வரை காத்திருந்த வாகனங்கள்
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கோட்டை:
கேரளாவில் கொரோனா தாக்கம் குறையாத நிலையில், அங்கிருந்து வருபவர்களால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் நபர்கள் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, கொரோனா தொற்று குறித்த 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் நாளை மறுநாள் (21-ந் தேதி) கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நடைபெற இருப்பதால் எல்லையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.
புளியரை சோதனை சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண ராஜ் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், தாசில்தார் ரோசன் பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனால் புளியரை சோதனை சாவடியையொட்டி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story