என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
டீசல் மீதான வரியை குறைக்க லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கனரக லாரிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கும் குறைக்கப்பட வேண்டும். இருமுறை முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளோம். பட்ஜெட்டிலும் எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
வெளி மாநிலங்களுக்கு 50 சதவீத லாரிகள் அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே அதிகளவில் இயக்கப்படுகின்றன. மாதம் 10 ஆயிரம் கி.மீ., ஓடிய லாரி, தற்போது 6,000 கி.மீ., மட்டுமே இயக்கப்படுகிறது. டீசல் விலை லிட்டர் 94.39 ஆக உள்ளது. டீசல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்க முதல்வர் வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story